| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 547 |
Untitled Document இகமும் பரமும் போராடி, முடிவில் பரவாழ்க்கை வெற்றி கொண்டதை இருவகை வாழ்விற்கும் பொதுவாகிய அன்பின் மூலமாய்ப் புலப்படுத்துகின்றன. இந்நிலையினின்றும் விளைந்து இதனினும் சிறந்து காணும் நிலையொன்றைக் கவிமணியின் ஆன்மா எய்தியுள்ளது. இப் பிற்பட்ட கனிவுதான் கவிமணியின் கீர்த்தனங்களிலே காணப்படுவது. சாதாரணச் செய்யுட்களுக்குரிய இலக்கணத் தளைகளைக் கீர்த்தனங்கள் தகர்த்தெறிந்து விடுவதுபோல், கவிமணியின்ஆன்மாவும்இகவாழ்வுபற்றிய தளைகளையெல்லாம் முற்றத் தகர்த்தெறிந்து விட்டது. ஐதீக நாட்டமே இந்நிலையில் இல்லை; பரம்பொருள் பற்றிய நாட்டமேஇதில்ஒளிவிட்டுத் திகழ்வது. நன்கு முதிர்ந்து பழுத்த நறுங்கனியின் தன்மையை ஒத்துளது கவிமணியின்ஆன்மா. ‘தாமரை இலையில் தண்ணீர்போல’ என்றுஆன்ம ஞானிகள் கூறுவது கவிமணியின் ஆன்ம - பரிபக்குவ நிலையை நன்கு உணர்த்துகிறது.
இப் பரிபக்குவ நிலையில்உலகனைத்தையும் அருளானைசெலுத்திப் பரிபாலித்து வரும் மூல பரம்பொருளின் மீதுள்ள பக்தியே எங்கும் காணப்படுகிறது. ப் பரம்பொருளின் பேதங்களாகவே நமது சமயத் தெய்வங்களும் பிறசமயத்தெய்வங்களும் கொள்ளப்படுகின்றன. கம்பரும்
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைக ளாலும் இயம்பரும் பொருளீ தென்னத் தொல்லையின் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்ததன்றே. | பால, ஆற்றுப். 19) என்று மூல பரம்பொருளின் தன்மையையும், சமயங்களின் தன்மையையும் விளக்கியுள்ளார். இத்தெய்வங்கள் நாம ரூபாதிகளால்,வேறுபடுகின்றனவே யன்றி, உண்மைத் தத்துவத்தில் வேறுபடுவன அல்ல என்பதை இம் மகாகவியே பிறிதோரிடத்துக் கூறுகின்றனர்.பேரை ஒரு பொருட்கே பல்வகையாற் பேர்த்தெண்ணும் தாரை நிலைய தமியை பிறரில்லை; யாரைப் படைக்கின்றது? யாரை அளிக்கின்றது? யாரைத் துடைக்கின்றது? ஐயா! அறியேமால்! | (யுத்த. இரணிய. 159) | |
|
|