Untitled Document இங்குக் கூறிய பொதுநோக்குடனே கவிமணிபற்பலதெய்வங்களைப் பற்றியும் கீர்த்தனங்களைப் பாடியுள்ளார் என்பதுநன்றாகமனங்கொள்ளத் தக்கது. சமயவிகற்பங்களை மனத்துட் கொண்டு அவற்றை ஆதரிக்கும் முறையில் சிவன், திருமால், முருகன் முதலிய தெய்வங்களைக் குறித்துக் கீர்த்தனங்கள் இயற்றப்பட்டன என்றுகருதுதல் தவறாகும்.தெய்வங்களைச் சம நிலையில் வைத்து அவற்றைக் குறித்துப் பாடியுள்ளார் என்பதும் பொருத்தமன்று. சமநிலை என்ற கருத்தே ஆசிரியரது உள்ளத்தில் நிலவாதது. நாமரூபங்களை எல்லாம் கடந்து நிற்கும் பரம்பொருளை இவற்றைக் கற்பித்தன்றிப் பிறவாறு பாடுதல் இயலாது. ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில் லாற்குஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ? | (திருவாச. தெள்ளே.1) என்று மாணிக்கவாசகர் கூறியது போலவே நமது கவிமணியும், ஒருநாமம் ஓருருவம் ஒன்று மில்லாற் காயிரம் - | (திருநாமம் பாடி வாழ்த்துவோம்) என்று பாடியுள்ளமை இங்குஅறியத்தக்கது.திருநாவுக்கரசர், மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னி னல்லால், ஒப்புடைய னல்லன்; ஒருவனல்லன்; ஓரூர னல்லன்; ஓருவம னில்லி அப்படியும் அந்நிற மும்அவ் வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன் இந்நிறத்தின் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே. | (தேவாரம் VI. 97, 10) என்று கூறுகின்றார்.
கவிமணி இப் பரிபக்குவ நிலையை அடைவதற்கு ஒரு வியாஜமாயிருந்தது தமிழிசை இயக்கம். ஆனால், அவரது கீர்த்தனங்கள் அனைத்தும் இவ்வியக்கத்தின் காரணமாகவே தோன்றின எனல் பொருத்தமில்லை. தொடக்கத்தில் சிறிதளவு இவ்வியக்கம் இவரை ஊக்கியிருத்தல் வேண்டும். ஆனால், இசையினால் மனம் கனிவுபட்ட பொழுது இவ் வியக்கத்தைப் பற்றிய நினைவு அறவே ஒழிந்துவிட்டது. இசைப் | |
|
|