பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு549

Untitled Document
பொருளிலேயே மனம்      ஆழ்ந்து ஈடுபட்டு நின்று அதன் மயமாகக்
கவிமணி   பரிணமித்து  விட்டனர் என்றே கூறுதல் வேண்டும். எனவே,
வடமொழிக் கீர்த்தனங்கள்,    தெலுங்குக் கீர்த்தனங்கள் முதலியவற்றை
முற்றும் ஒழித்துத் தமிழ்க்  கீர்த்தனங்களின் சார்பாகவே முற்றும் நின்று, இசை விவகாரப் பூசலில்    இவர் கலந்து கொண்டார் என்று கருதுவது
பெரியதொரு தவறாகும்.

     கவிமணி   இயற்றியுள்ள கீர்த்தனங்களின் இயல்பை நோக்கினால்,
பூசற் கருத்து முதலியவற்றிற்குச் சிறிதும் இடமில்லையென்பது விளங்கும்.

     மக்கள் இயல்பையும் உலக  இயல்பையும் பரிசீலனை செய்த ஒரு
ஞானிக்கு மனிதனது அற்பத் தன்மையும் அவனது அறிவு ஆற்றல்களின் சிறுமையும் எளிதிற் புலப்படும்.

உன்னாலே என்ன ஆகும்? - ஏழை மனிதா!
     உன்னாலே என்ன ஆகும்?

     என்ற கீர்த்தனம் இக்கருத்தினையேஉட்கொண்டது.இக்கருத்தினால்
நிறைந்த உள்ளத்தின்  இயல்பை அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது.
இவ்வுள்ளம் பாதை அறியாதபடி பரிதவித்து உழலும்; எங்கு நோக்கிலும்
அச்சமே இதனை       வருத்தும்; இவ்வுள்ளத்திலே களைகள் ஆகிய
குற்றங்கள் நிரம்பி உண்மைக்  கதிர் செழித்தோங்குவதற்குத்  தடையாய்
நிற்கும். வீண் முயற்சிகளில் மூண்டு   நின்று அவதியுறும். உண்மையான
நெறிகளிற் செல்லாது தடுமாறும்.

     மக்களது உள்ளத்தியல்பு         இவ்வாறாக, இறைவன் இயல்பு
மாறாகவுள்ளது. ஈடும் எடுப்புமிலா ஏக பரம்பொருளாகிய அவன் நமக்கு மிகச் சேய்த்தாயிருக்கின்றான். எனினும்,    அப்பனும் அம்மையும்போல்
அவன் அணியனாயும் இருக்கின்றான். அவனைத் தேடித் திரிந்தால்காண
இடங்கொடான். ஊனக்கண்ணால்    நோக்கினால் சோதி சொரூபனாகிய
அவனுடைய பேரொளியும், எங்கும் உலவி வரும் அவனது காட்சியழகும் காண முடியாதவையாயுள்ளன; இரண்டல்ல, ஆயிரம்கண்கள் இருந்தாலும் அவை போதா : மனக்கண்ணினால் மாத்திரமே அவன் அறிதற்குரியவன்.
அவனது தன்மை இயற்கைத்   தோற்றங்களில் வெளிப்படுகின்றது. சரத்
காலமும் அவனது அற்புதக்   காட்சியையே நமக்கு வெளிப்படுத்துகிறது.
அக்காலத்தில் நமது உள்ளத்தில்  ஊக்கத்தைநிரப்பிக் களிப்பைப்பெருகச்
செய்து, விளையாட்டுக்களில் பற்று விளைத்து; இன்னிசைகளில் இன்புறச்
செய்து மகிழ்விக்கும்    இயல்புடையவன். மனத்தை வசீகரிக்கும் இனிய
கதைகளுக்கு அவன் நாயகனாக விளங்கும் இயல்புடையவன்.

     அவன் அருள்மயமாக       ள்ளவன். எனினும், பாத்திரங்களின்
இயல்பறிந்து, பக்குவமறிந்து, சமயமறிந்து இரக்கங் காட்டிஅருள்புரிவான்.