பக்கம் எண் :

550கவிமணியின் கவிதைகள்

Untitled Document
அவன் சிற்சில காலங்களில் சித்திரத்திலும்  சிற்பத்திலும் காணக் கூடாத
பேரழகுடைய மோகினியாகி நமக்குக் காட்சியளித்து வசீகரிக்கும்தன்மை
வாய்ந்தவன்.

     இங்ஙனமாயிருந்தும் இறைவனது  அருள் - தன்மை ஒன்றே நமது
வியப்புணர்ச்சியை முற்றும் கவர்ந்து விடுகிறது. இவ்வருளைப் பெறுதற்கு உரிய அறிவுரைகள்    உள்ளத்திற்கு இன்றியமையாதவை. எப்பொழுதும்
அவனுடைய        குணவிசேஷங்களை நினைந்து நினைந்து அவனை
நினைவிலிருத்த வேண்டும்        என்று அறிவுறுத்தப்படுகின்றது. வீண்
முயற்சிகளில் மனத்தை அலையவிடாது அவனை வந்தனை செய்வதிலும்
வாழ்த்தெடுப்பத்திலும் நமது காலம் செலவிடப்படுதல் வேண்டும்.அவனது
சாந்நித்தியம் விளங்குவதாகக்   கருதப்படும் தில்லை முதலிய புண்ணிய
ஸ்தலங்களில் சென்றால்        நமது மனமும் தூயநிலையை அடையும். அவ்வாறு    செல்ல வேண்டும் என ஓர் உபதேசம்அளிக்கப்படுகின்றது.
உள்ளததை நோக்கி,   அவனைச் சென்றடைய வழியில்லை என்று வாடி
வருந்தவேண்டாம். உயிரினங்களை     யெல்லாம் காத்தற்குக் கங்கணம்
பூண்டுள்ளான்    அந்தக் கருணாகரன். தான் நஞ்சினை உண்டுங் கூடப்
பிறருக்கு அருள் புரியும்         பேரருளாளன். இவன் உனக்கு அருள்
செய்யாதிருக்கமாட்டான்.         நீ செய்ய வேண்டுவதெல்லாம் அவன்
புகழைப்பாடிப்   பணிவதொன்றே. அவனுடைய திவ்ய சரித்திரங்களிலே
எத்தனையோ அருட்      செயல்கள் புலப்படுகின்றன. அவற்றைப்பற்றி
நெஞ்சமே நீ நித்தமும் பாடிப் பரவுதல் வேண்டும்.

     மலைவு என்பது       உன்னிடம் இருக்கக் கூடாது. அதற்கு ஒரு
காரணமும் இல்லை.    லையாழி புரளாமலும் அண்டங்கள்  சிதறாமலும்
அவன் நிலையாய் நிறுத்துகின்றவன். உன்னைக் கைதூக்கி ஆள்வதற்குச் சிறிதும் பிற்பட மாட்டான். நீ அச்சங்கொள்ளவும்வேண்டுவதில்லை;யமன்
வரினும் அச்சம்       கொள்ள வேண்டாம். உன் கையிலே யமனையும்
வெற்றிகொள்ளத்தக்க ஆயுதம் இருக்கிறது.   இறைவனது சின்னங்களை
அணிந்து அவனது திருநாமங்களைக் குறிக்கும்மந்திரத்தைஓதுவாயானால்
எதற்கும் நீ அஞ்சுதல் வேண்டாம்.

அச்ச மில்லைநெஞ் சேஅரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயற

என்று அப்பர் கூறவில்லையா? (தேவா. V. 60,2)

     என்ன செய்வேன்         என்று நீ தளரவும் வேண்டாம். கடந்த
நாட்களெல்லாம் வறிதே      போக்கி விட்டதாகக் கருதி நீ கலங்குதலும்
வேண்டாம். அவன் உனக்கு அருள்புரிதல் உறுதி.