பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு551

Untitled Document
     இவ்வாறெல்லாம் நெஞ்சிற்கு அறிவுரை கூறி, அவன் மீதுவைக்கும்
பக்தியொன்றே ஆன்ம ஈடேற்றத்திற்குரிய வழி என்று பல இடங்களிலும்
கவிமணி வற்புறுத்துகிறார்.       இப் பக்தியினால் ஆசிரியரை முற்றும்
கவளீகரிக்கின்ற   பேரவா ஒன்று. ‘கண்டு தொழ வேண்டும்’ ‘வேறெதும்
வேண்டேனே’ என்ற      இரண்டு கீர்த்தனங்களிலும் வெளியாகின்றது.
நந்தனாரது        உள்ளப்பாங்கே    இங்கும் நமக்குப் புலனாகின்றது.
பக்திப்பரவசத்தில் இறைவனது அருளைப் பலவாறாக இவர்வேண்டுகிறார். இவ் அருளே அடைக்கலம்; அன்றி வேறு புகலில்லை என்பது ஒரு சில
கீர்த்தனங்களில் உணர்த்தப்படுகிறது.   இவ் அருளைப் பெற்று விட்டால்
எதற்கும் தயங்க வேண்டுவதில்லை என்ற மனத்திட்பம்ஒருகீர்த்தனத்தில்
உணர்த்தப்படுகிறது. இறைவனை    முற்றும் நம்பி, அவன்மீது பாரத்தை
வைத்தால்தான் இவ்     அருளைப் பெறுவதற்குரிய மார்க்கம் என்பதும்
நமக்கு    உபதேசிக்கப்படுகிறது. இவ்வாறு அருளைப் பெற்ற பின் நமது
மனம் இறுமாப் பெய்கின்றது; விதியையும் வெல்ல முடியும்என்றுதுணிந்து
அறைகூவுகின்றது.         ஊரூராய்ச் சுற்றுதல் வேண்டும் என்று பறை
கொட்டுகின்றது.

நம்பும் அடியர்க்கெம்
நாளும் அருள்வானைச்
சிந்தனை செய்வோமே

என்று நாடறிய விளம்பரம்    செய்கின்றது. பக்தியைத் துணைக்காண்டு,
அருள் இரந்து, இறைவன்பால் மனம் விரைவுபட்டு விரும்பிச்செல்வதைக்
கீர்த்தனங்கள் பலவற்றிலும் காணலாம்.

     இங்ஙனமாகப் பக்தி    நறியில் நிற்பவன் தன்னை நாயகியாகவும்
இறைவனை      நாயகனாகவும் பாவித்துக் காதல் நெறியில் வழிபட்டுச்
செல்வது எல்லாச் சமயங்களிலும் காணப்படுவதொன்றே.

     இந்நெறி இறைவனுக்கும்உயிர்களுக்கும் இருக்கும்அன்னியோன்யத்
தொடர்பினை இனிதாய்       அழகுபெற விளக்குவது; உள்ளஞ்சென்று
பற்றுவதற்கு          எளிதாயுள்ளது. தமிழ் நாட்டில் இந்நெறி பெருகி
விளங்குவதற்குத் தக்க வாய்ப்பும் இருந்தது. தேவாரத் திருப்பதிகங்களில் பல இடங்களிலும் இந்நெறியைக் காணலாம்.

     சங்க காலந்தொட்டு காதல்துறைப் பாடல்களை இயற்றி அவற்றைப்
பயின்றுவந்த தமிழ் மக்கள் அவற்றின் இன்சுவையில் ஈடுபட்டு ஆழ்ந்து
விடுவது முழுதும்    இயல்பேயாகும். பின்னர், 9,10-ம் நூற்றாண்டளவில்
கோவை முதலிய பிரபந்தங்களில் இவ் அகத்துறைப் பாடல்கள் பல்வேறு துறைகளாகப் பாகுபடுத்து   இயற்றப்பெற்று வந்துள்ளன. மாணிக்கவாசக
சுவாமிகளது திருக்கோவை இதற்கொரு