Untitled Document
| 474 | | கால்முடம் நீக்கிடுவான் - குருட்டுக் கண்களும் காணவைப்பான்; சாலப் பெருநோயும் - கையால் தடவிப் போக்கிடுவான். |
| 475 | | தேச விவகாரம் - அவனும் செவியிற் கொள்வதில்லை; காசு பணத்தை அவன் - என்றுமே கைகளால் தொட்டதில்லை. |
| 476 | | பக்கத்தில் உள்ளவர்கள் - தேச பக்தர் புரோகிதர்கள் மிக்க பழிசுமத்தி - அவனுளம் வெந்திடச் செய்து விட்டார் |
| 477 | | "யூதரின் மன்னவன்யான் - எனவந்து ஓதுகின்றான்; இவனை நீதிசெய் வீர்" எனவே - மன்றத்தில் நிறுத்தி வழக்காடினார். |
| 478 | | ஏசுவி னைச்சிலுவை - மரத்தில் ஏற்றிக் கொல்வதென்றே நாசகா லர்கூடி - விதியங்கே நாட்டி விட்டார் ஐயோ! |
| 479 | | "மன்னுயிர் காத்திடவே - இங்கு வந்து பிறந்தமகன் தன்னுயிர் காக்கவெண்ணாது - இன்று தயங்கி நிற்கின்றான்! |
| 480 | | முழக்கம் செய்துவந்தான் - வழக்கை முடித்து நிற்கின்றான்; ஒழுக்கம் காட்டவந்தான் - இங்கே உயர்வு பெற்றுவிட்டான்!" |
| 481 | | என்று பற்பலரும் - அவனை ஏளனம் செய்து நின்றார்; ஒன்று உரையாமல் - உரவோன் உள்ளம் அடங்கிநின்றான். | |
|
|