பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு77

Untitled Document
482 "யாதும் அறியாதார் - அவர்பிழை
     யாவும் பொறுத்திடுவாய்;
நாதனே! என்றீசன் - அருளை
     நயந்து வேண்டிநின்றான்.

483 விண்ணையே நோக்கி நின்றான் - எதனை
     வேண்டி நின்றனனோ?
எண்ணிய எண்ணமெல்லாம் - இங்கே
     யாவர் அறிவர் அம்மா!

484 "உண்ணையே நம்பி நின்றேன் - உதவிக்கு
     ஒருவரை யும்காணேன்;
என்னைக்கை விட்டனையோ? - ஈசா!"
     என்று வருந்தி நின்றான்.

485 தெய்வ உதவியெதும் - அந்நாள்
     தெரிய வந்த தில்லை
செய்த விண்ணப்பமெல்லாம் - வீணாய்
     சிதைந்து போனதையோ.

486 சரணம் நீ யென்றே - தலையைத்
     தாழ்ந்து நின்றதலால்,
மரண வேளையிலும் - ஈசனை
     மறந்த தில்லை அவன்.

487 ஆவி பெற்றனனோ? இன்றும்
     அம்புவி வாழ்பவனோ?
யாவர் அறிந்திடுவார் - அறியினும்
     யாவரே கூறவல்லார்

உள்ளமும், உணர்வும் (6)
66. புல்
489 பசும்புல் என்பெயர்; பட்டபா டெல்லாம்
ஒருபெரும் கதையாம்; உரைப்பதும் எளிதோ?
விரிவிடம் படுமொரு வீட்டின் முன்றிலில்
வளர்ந்தேன். அங்குள மனிதரோ கொடியர்;