என்னுடைய நண்பர்களே என்னைக் கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்.
என் அறையில் முத்துக்களையும் மணிகளையும் குவித்து வைத்திருக்கவில்லை.
என் தலையில் நிலா ஒளிவீசும் மகுடம் தாங்கி கங்கை கொண்ட இராசேந்திரன் போல் உலா வரவில்லை.
என் உடலில் பட்டணிந்து பகட்டவில்லை.
பிறகு ஏன் இப்படிப் பேசுகிறார்கள்
ஓ...காரணத்தைக் கண்டு கொண்டேன்... நீ என்னை நேசிக்கிறாய்...
அதனால்தான் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்.
11 |