சில நாட்களுக்கு முன்பு காட்டுக்குப் புறப்பட்டேன்.
தலையை வெளுக்கச் செய்யும் அற்பக் கவலைகளையும் அன்றாடச் சிக்கல்களையும் இறக்கி வைத்துவிட்டு மனித ஒலி பெருக்கிகளற்ற மலையடிவாரத்திற்குப் புறப்பட்டேன்.
அதற்குள் நீ வந்துவிட்டாய் உன்னால் என் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதோ, மீண்டும் தயாராகிவிட்டேன் ஆனால், தனியாக அல்ல... துணையோடு!
காற்றைப் போலவும் கலைமான்களைப் போலவும் கட்டின்றித் திரியலாம்.
பர்ணசாலைகளில் மலர் மஞ்சங்களில் பனிக்கால இரவுகளை வரவேற்கலாம்.
என் இரண்டாம் சீதையே, எழு!
31 |
|
|
|