புண்ணியத் தலம் நோக்கிப் புறப்பட்ட கூட்டத்தோடு நானும் போனோன்.
உன் கிராமத்துக்குப் பக்கத்தில் வந்ததும் நான் நின்று கொண்டேன்.
“இன்னும் எழுபது கல் செல்ல வேண்டும்; புறப்படு” என்று கூட்டத்தினர் கூறினர்
“நானோ என் புண்ணியத் தலம் இதோ தெரிகிறது நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டு என் பருவக் கனவுகள் படரும் உன் வீட்டு முற்றத்தை நோக்கினேன்.
சாளரத்தின் வழியாகப் பரந்த உலகத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிடும் ஒரு சிறைக்கைதியைப் போல நெடுநேரம் அப்படியே நின்றேன்.
32 |
|
|
|