நான் வீழ்ந்து விட்டேனாம்
பிரியத்தோடு பாடம் படிக்க வந்த பாவை ஒருத்தியிடம் குரு ஒருவன் வீழ்வதைப் போல் -
ஆர்வத்தோடு பாதபூசை செய்ய வந்த பக்தை ஒருத்தியிடம் யோகி ஒருவன் வீழ்வதைப் போல் - நான் வீழ்ந்து விட்டேனாம்!
என்னை எவரெஸ்டாகப் பார்க்கும் இந்த ஊரின் பார்வையில் என் வீழ்ச்சி மிகப் பெரிய வீழ்ச்சியே.
எனினும் இது இயல்பானது தடுக்க முடியாதது.
சமதளத்தில் ஓடி வரும் நீரைத் தடுக்கலாம். அணை போடலாம். மலைத் தலையிலிருந்து விழும் நீரை எப்படித் தடுக்க முடியும்?
என் வீழ்ச்சி நீர் வீழ்ச்சியே!
33 |