சின்ன வயதில் என்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள்.
கையில் அரிவாள்; கண்ணில் கொலைவெறி, நாவில் குருதிப்பசி, கோரத் தோற்றம் கொண்ட ஒரு சிலையைக் காட்டி “இதுதான் உன் குலதெய்வம், கும்பிடு” என்றார்கள் நான் கும்பிட்டேனோ, என்னவோ?
அமிர்தத்தின் மகளான உன்னைக் கண்டபோது யாரும் கூறாமலேயே என் வாய், குலதெய்வம், குலதெய்வம் என்று உச்சரித்தது; என்னைக் கேட்காமலேயே என் கை குவிந்தது.
இனிமேல் என்னை யாரும் ஏமாற்ற முடியாது.
35 |
|
|
|