கடற்கரையில் மணல் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்.
என் புறமிருந்து நீ சிரிக்கிறாய்.
நான் பாலகாண்டத்தைப் புரட்டுவதாக நினைக்கிறாய்.
உன் ஊடலில் குளிர்காயும் ஆசையில் எதுவும் பேசாமல் ஒரு கிணறு தோண்டுகிறேன்.
“உங்கள் கிணற்றில் நீர் சுரக்கிறதா?” என்கிறாய்
“உன் இதயத்தில் அன்பு சுரக்கிறதா?” என்கிறேன்
நீ கண்களால் மழைபொழிகிறாய்.
என் கிணறே அந்த நீரில் கரைந்து விடுமோ என்று பயப்படுகிறேன்.
சமாதானப் புறாவைப் பறக்கவிட்டுஉன் மார்புக் கூட்டில் தலை சாய்க்கிறேன்.
“கிணற்று நீரை வெள்ளமா கொண்டுபோகும்?” என்று நீ மெல்ல நழுவுகிறாய்.
ஓ...இதுவும் ஒரு கற்பனை தான்.
46 |
|
|
|