நீ “எங்கள் கிராமத்திற்கு மின்சார வசதியில்லை” என்று வருத்தப்படுகிறாய்; அதிகாரிகள் மேல் ஆத்திரப்படுகிறாய்.
நான் “உன்வதனப் பொன் வெளிச்சம் இருக்கும்போது மின் வெளிச்சம் எதற்கு” என்று பேசாமல் விட்டிருப்பார்கள் என்கிறேன்.
உன் முகத்தில் வெட்கம் சித்திரம் வரைய, நீ “போங்கள்” என்கிறாய், நான் உன் அருகே வருகிறேன்- உண்ணும் போது வாய்க்கு அருகே வரும் கையைப் போல!
47 |
|
|
|