செம்படவன் ஒருவன், இரண்டு வரால் மீன்களைப் பிடித்து வருகிறான்;
நீ அவற்றை விலைக்கு வாங்கித் தடாகத்தில் துள்ள விடுகிறாய்.
வேடன் ஒருவன் இரண்டு புறாக்களைப் பிடித்து வருகிறான்;
நீ அவற்றையும் வாங்கி வானத்தில் பறக்க விடுகிறாய்.
நான் என்றோ என்றோ என் உள்ளுயிரை வாங்கி வைத்திருக்கும் உன்னை வியந்து பார்க்கிறேன்.
“என்ன பார்க்கிறீர்கள்...உங்களுக்கும்...”
“வேண்டாம்...வேண்டாம்... என்னை மட்டும் விட்டு விடாதே! விடுதலை செய்து விடாதே!” என்று கெஞ்சுகிறேன்.
49 |
|
|
|