“கண்ணில் தூசுவிழுந்து விட்டது. கொஞ்சம் ஊதி எடுங்கள்” என்கிறாய்;
நல்ல உதவி...நான் மறுப்பேனா? ஊதிக் கொண்டிருக்கிறேன்.
“நீங்கள் ஊதுகிறீர்களா? உறிஞ்சுகிறீர்களா? இது உதடு அல்ல; கண்?” என்கிறாய்.
நான் சிரித்துக்கொண்டே, “எனக்கு இப்படியெல்லாம் வித்தியாசம் பார்க்கத் தெரியாது” என்கிறேன்.
“உங்கள் உதட்டில் தூசு ஒட்டிக் கொண்டிருக்கிறதே” என்று தொடர்கிறாய்.
“அதை விட்டு விடு. அது என்னுள்ளே போகட்டும்; உன் கண்ணின் செய்தியைத் தூதாக இருந்து சொல்லட்டும்” என்கிறேன்.
இதுவும் ஒரு கற்பனைதான்!
52 |
|
|
|