“மார்கழி மாதத்தில் என் பிறந்த நாள் வரப்போகிறது” என்று கூறிவிட்டுப் போகிறாய்.
உன் பிறந்ததினப் பரிசாக ஒரு மானையோ மயிலையோ கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்
என் பரிசு உயிருள்ள பரிசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அடுத்த வினாடியே அப்படிக் கொடுத்தால் நீ என் மீது பொழியும் அன்பு வெள்ளத்தில் ஒரு துளியை அந்த உயிரின் மீது சிந்தி விடுவாயோ என்று பயப்படுகிறேன்.
நான் வெறுங்கையோடு வரத் தீர்மானிக்கிறேன்.
53 |
|
|
|