நானும் நீயும் உரையாடுகிறோம்;
“நெடுங்கடலில் மூழ்கி நித்திலங்களை எடுத்துத் தொடுத்து உனக்கு மாலை சூட்ட விரும்புகிறேன்: நீ ஏற்றுக் கொள்வாயல்லவா?”
“நீங்கள் பெரிய தீரர்தான்; ஆனால் அந்த முத்துமாலை எனக்கு வேண்டாம்”
“வானத்தில் ஏறி விண்மீன்களைக் கொய்துகட்டி உனக்கு மாலை அணிவிப்பேன்; அதையாவது ஏற்றுக் கொள்வாயல்லவா?”
“நீங்கள் பெரிய கவிஞர்தான்; ஆனால் அந்த நட்சத்திரமாலை எனக்கு வேண்டாம்.”
“ஓ...சாதாரண மலர் மாலையைத்தான் நீயும் விரும்புகிறாயா?”
“இல்லை... அதுவும் வேண்டாம்.”
“இப்படி எதுவும் வேண்டாமென்று மறுத்தால் உன் கண்கள் என் கண்ணீரையல்லவா சந்திக்கக் கூடும்”
“எனக்கு அந்தக் கண்ணீர் மாலைதான் வேண்டும்”
67 |
|
|
|