நான், உன் முகத்தைக் தாமரை என்று சொன்னால் பொய் என்று சொல்;
உன் நெற்றியைப் பிறை என்று சொன்னால் பொய் என்று சொல்;
உன் இதழ்களைக் கோவைப் பழங்கள் என்று சொன்னால் பொய் என்று சொல்;
இப்படி அடி முதல் முடி வரை உன்னை அழகழகான வார்த்தைகளால் அற்புதமான உவமைகளால் வருணித்தால் அவற்றையெல்லாம் பொய் என்று சொல்; வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால்... ஆனால் உன் இனிய வாயால் என் காதலை மட்டும் பொய் என்று சொல்லிவிடாதே!
77 |
|
|
|