நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா?
செப்புக் கம்பிகளில் மின்சாரத்தை ஊடுருவ வைத்துவிட்டு விஞ்ஞான வேலைக்காரன் விலகிக் கொள்வதைப் போல் என் சிந்தனை அணு ஒவ்வொன்றிலும் உன் ஆதிக்கத்தை ஊடுருவ வைத்து விட்டு நீ விலகப் போகிறாயா?
கப்பல் எவ்வளவு பெரிதாகப் போட்டாலும் கணப் பொழுதில் காணாமற் போகும் தண்ணீர்ப் பாதையைப் போல் என்னைவிட்டு எங்கோ போகப் போகிறாயா?
பிழைக்கப் போன இடத்தில் தன் கணவன் கள்வன் என்று குற்றம் சாட்டப் பட்டதோடு கொலையும் செய்யப்பட்ட கொடுமையைக் கேட்டுக் குலை நடுங்கிய ஒரு பத்தினியைப் போல் என்னை நடுங்கவைக்கப் போகிறாயா?
நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா?
79 |