என்னைப்பார்
ஏகாதிபத்தியத்தின் கொடுமைக்கு இரையாகும் ஒரு சிற்றரசைப்போல் வாடி வருந்தும் என் மேனியைப் பார்.
முதலாளித்துவத்தின் சுரண்டலுக்குப் பலியாகும் பாட்டாளி வர்க்கம் போல் சாரம் இழக்கும் என் இளமையைப் பார்.
நிலப் பிரபுத்துவத்தின் நீசக் கரத்தில் சிக்கிக் கிடக்கும் கூலி விவசாயிகள் குடும்பம் போல் வெந்து பொசுங்கும் என் வாழ்வைப் பார்.
பார்த்து விட்டுப்போ!
80 |
|
|
|