கூடல் நகரில் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் பார்க்க ! இந்தக் கவிதையில் கூடல் நகரில், பார்க்க என்னும் இரண்டு வார்த்தைகளைத் தவிர திரும்பத் திரும்ப ஒலிப்பது ‘கூட்டம்’ என்னும் வார்த்தைதான். கூட்டத்தின் அடர்த்தியைக் காட்சிப்படுத்த அப்படி எழுதினேன். இதை ஏதோ ஒரு பத்திரிகையில் வெளியிட்டேன். கவிதையைப் படித்துவிட்டு கவியரசர் வைரமுத்து தம்பி பாலா போன்றோர் பாராட்டி எழுதியதாக ஞாபகம். மஹாகவியின் குறும்பா போலவோ ஆங்கில லிமரிக்ஸ் போலவோ அடி, சீர் வரையறை இல்லாமல் ‘கூட்டம்’ கவிதை போல் என் பாணியில் எழுதத் தொடங்கினேன். ஹைகூ என்னும் ஜப்பானியக் கவிதை வடிவம் தமிழ்க் கவிதையுலகில் சூறைக் காற்றாய் வீசிக் கொண்டிருந்த போது நான் ‘குக்கூ’மழையில் நனைந்து கொண்டிருந்தேன். வீதியில் நடக்கும் போதும் பேருந்தில் பயணம் போகும் போதும் சில குக்கூக் கவிதைகள் மனதில் ஓடி வந்து ஒட்டிக்கொண்டன. வீட்டுக்கு வந்ததும் பழைய துண்டுக் காகிதங்களில் அவற்றை எழுதி வைத்தேன். கண்ணில் கண்ட காட்சிகளையெல்லாம் மேற்பூச்சு இல்லாமல் பதிவு செய்து வைத்தேன். சில கற்பனைகளுக்கும் உயிர் கொடுத்தேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிப்போட்டவை இவை. சில கவிதைகள் எழுதப்பட்ட பழைய தாள்கள் நைந்துபோய் விட்டன. சில கவிதைகள் களவு போயின. எஞ்சியவற்றில் ‘தினமணி’ கதிரிலும், சில பால்ராஜ் கென்னடியின் ‘வீடு’ தொகுப்பிலும் சில ‘அன்னம் விடு தூது’விலும், சில திரு.இந்திரன் தொகுத்த Meera’s Se-lected Poems |