பக்கம் எண் :

மீரா.35

25

தலையில் இருக்கும்
தண்ணீர்க் குடம். . . .
தலைவன் எதிர்வரும்
அடுத்த வினாடியே
அது - தங்க மகுடம்.

26

கல்தான் முள்தான்
காலில் குத்தும் நெருஞ்சி ;
கடந்து போ
மேலே மேலே
நடந்து போ. . . .
கண்ணைக் கவரும் குறிஞ்சி.