பக்கம் எண் :

மீரா.37

29

குழாயிலிருந்து
விழுந்தது தண்ணீர் கனமாய்
சுற்றும் முற்றும்
பார்த்துவிட்டுத்
தொட்டியில் விழுந்தேன்
அம்மணமாய். . . .

30

ஆயிரம் ஈக்கள்
மொய்க்கும் ஆசையில்
வானத் தட்டில்
இராத்திரிக் கிழவி
சுட்டு வைத்த
ஒற்றைத் தோசையில்