பக்கம் எண் :

மீரா.59

73

தாயின் கர்ப்பத்தைக்
கண்டு பிடிக்கும்
தணியாத ஆசையில்
தரையை இடிக்கும்
ஆலம் விழுதுகள்

74

அழுக்கைத் தின்னும்
மீனைத் தின்னும்
கொக்கைத் தின்னும்
மனிதனைத் தின்னும் - பசி