எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?
பார தத்தைத்
தாக்க வந்தார்
பகைவர் என்று தெரிந்ததும்,
வீரம்
பொங்கத் தீரத் தோடு
விரைந்து சென்றார் போர்க்களம்.
உறக்கம்
இன்றி, உணவும் இன்றி
உயிரை மதித்தி டாமலே,
அரக்க ரான எதிரிப்
படையை
அலற அலற விரட்டினார்.
மூர்க்க மான டாங்கிப்
படையை
முறிய டித்து நொறுக்கினார்.
தாக்க வந்த
விமானம் யாவும்
தவிடு பொடியாய் ஆக்கினார்.
சிங்கம் போல வீரத்தோடு
தேசம் தன்னைக் காக்கவே
எங்கள் அண்ணன் செய்த
வேலை
எனக்குப் பெருமை அல்லவோ?
எனக்கு மட்டும் பெருமையில்லை;
இந்தி யர்க்கே பெருமையாம்! |