உறுதி! உறுதி! உறுதி!
உண்மை பேச நானுமே
உறுதி கொண்டேன். ஆயினும்
சின்னச் சின்னப் பொய்களைத்
தினமும் ஏனோ சொல்கிறேன்.
“என்றன் மாமா லண்டனில்
இருக்கி றாரே, தெரியுமா?”
என்று நானும் புளுகுவேன்.
இதிலே பெருமை கொள்ளுவேன்.
நல்ல பாம்பு, பாம்பென
நண்பர் கூடி இருக்கையில்
சொல்வேன். அவர்கள் யாவரும்
துடித்தே ஓட மகிழுவேன். |