பச்சைக் கண்ணன்
சீனி மிட்டாய்க் கடையிலே
சின்னச் சின்னப் பொம்மைகள்.
சின்னச் சின்னப் பொம்மைகள்
சீனி மிட்டாய்ப் பொம்மைகள்.
கண்ணன் பொம்மை இருந்தது.
காந்தி பொம்மை இருந்தது.
வண்ண வண்ணப் பொம்மைகள்
வரிசை யாக இருந்தன.
காசு கொடுத்து நானுமே
கண்ணன் பொம்மை வாங்கினேன்.
ஆசை யாக எனதுவாய்
அருகில் கொண்டு போயினேன். |