விமலா :
வாய்தி றந்து ஏதோ வார்த்தை
சிரித்து வருகுது!
மல்லி கைப்பூ அதோ, அதோ
சொல்ல வருகுது!
மல்லிகைப்
பூ :
மல்லி கைப்பூ என்ற வுடனே
மணம ணக்குமே.
மக்க
ளுடைய உள்ள மெல்லாம்
மயங்கி நிற்குமே.
உள்ளம்
குளிரப் பெண்கள் தலையில்
என்னை அணிவரே.
உருவம்
சிறிதே ஆன போதும்
உயர்ந்த வள்நானே !
முத்து
வடிவம் கொண்ட என்றன்
உடலைப் பாருங்கள்.
வெள்ளை
உள்ளம் போன்ற என்றன்
நிறத்தைப் பாருங்கள்.
இத்த லத்தில்
மலர்க ளுக்குள்
சிறப்பு மிக்கவள்
என்னைப்
போல ஒருத்தி உண்டோ ?
இல்லை, இல்லையே ! |