தம்பி
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றி வருவார்; அழைத்துவா.
தம்பி
சுப்ர மணியர்
கோயிலைச்
சுற்றிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
கப்பல் காரன்
தெருவிலே
கடையில் இருப்பார்; அழைத்துவா.
தம்பி
கப்பல் காரன்
தெருவிலே
கடையில் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சும்மா திரும்பி
வந்திடு.
துரித மாகச் சென்றிடு.
தம்பி
சும்மா திரும்பி
வரவாநான்
இம்மாந் தூரம் அலைவது?
அம்மா டியோ!
இங்குநான்
நிம்மதி யாய்த் தூங்குவேன்.
‘குப்புசாமி-அப்புசாமி’
பற்றிய மற்றப் பாடல்களை வேறு ஒரு நூலில்
காணலாம் |