பக்கம் எண் :

குழந்தைக் கவிஞரின்
படைப்பும் பணியும்



  
பிறப்பு    : 7-11-1922, இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம்.


  
பெற்றோர் : அழகப்பச் செட்டியார், உமையாள் ஆச்சி.
கவிதை எழுதத் தொடங்கியது : 13-வது வயதில்.


 
 ‘சக்தி’யில் பணி : 1940-ல் வை. கோவிந்தன் அவர்களின் சக்தி அலுவலகத்தில்


   பொருளாளராகச் சேர்ந்தார். ‘சக்தி’ இதழின் ஆசிரியர் தி.ஜ.ர. அவர்களின் ஆதரவால் சக்தியில் எழுதத் தொடங்கினார்.

 
 இந்தியன் பாங்கில் பணி : 1941-ல் இந்தியன் பாங்கில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, பல கிளைகளில் மேலாளராக இருந்தபின், காரைக்குடியில் வட்டார மேலாளராகப் (Area Manager) பணியாற்றி 1982 நவம்பரில் ஓய்வுபெற்றார்.

   
புத்தகங்கள் : இதுவரை குழந்தைகளுக்காக ஏறத்தாழ 60 புத்தகங்களை
எழுதியுள்ளார்.

மத்திய அரசின் பரிசு பெற்றவை :

1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாட்டிலே காந்தி கதை

 

தமிழக அரசின் பரிசு பெற்றவை :


            1. மலரும் உள்ளம்
                  (முதல் தொகுதி) கவிதைகள்
            2. பாப்பாவுக்குப் பாட்டு
            3. நல்ல நண்பர்கள் (கதை)
            4. பெரியோர் வாழ்விலே
            5. சின்னஞ் சிறு வயதில் வாழ்க்கை நிகழ்ச்சிகள்
            6. பிள்ளைப் பருவத்திலே

குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர் : 1950-ல் குழந்தைகளுக்காக
எழுதுவோரை ஒன்று சேர்த்து, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர்.
பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர். தற்போது இதன் தலைவர்.

தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் :

          தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து
1966-ல் அச்சங்கத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
 

 

 
206