தென்மொழிப் புத்தக டிரஸ்டில்
பணி :
ஃபோர்ட்
ஃபவுண்டேஷன்
நிறுவிய தென்மொழிப் புத்தக டிரஸ்டில் குழந்தைப்
புத்தகத் தனி
அலுவலராக (Special Officer for Children’s Books) 51/2
ஆண்டுகள்
பணிபுரிந்து, தென்மொழிகள் நான்கிலும் பல நூல்கள் வெளி
வரவும்,
அவற்றில் பல பரிசுகளும் பாராட்டுகளும் பெறவும் உதவினார்.
பாராட்டு :
1961 மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டில் கேடயம்
வழங்கியவர் :
குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர்
ஹூசைன் அவர்கள்.
1963 லக்னோவில் நடந்த அனைத்திந்திய குழந்தை
இலக்கிய மாநாட்டில்
வெள்ளிப் பதக்கம்.
1972 பாரதி இளைஞர் சங்க விழாவில் ‘பிள்ளைக் கவியரசு’
பட்டம்
பொறித்த கேடயம்.
1975 தமிழ்க் கவிஞர் மன்றத்தின் முதல் மாநாட்டில்
கேடயம்.
1977 குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில் கேடயம்
வழங்கிப்
பொன்னாடை போர்த்தியவர் : குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி
அகமத் அவர்கள்.
1979 சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாவில்
‘மழலைக் கவிச் செம்மல்’
பட்டம் பொறித்த கேடயம்.
1982 மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்திய சிறப்புப்
பட்டமளிப்பு
விழாவில் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டமும், ரூ.
5000/-
மதிப்புள்ள பொற்பதக்கமும்.
1982 கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்க வெள்ளி
விழாவில் குத்துவிளக்கு.
1985 புதுடில்லியில் நடந்த அனைத்திந்திய குழந்தைகள்
கல்வி மாநாட்டில்
கேடயம்.
மொழி பெயர்ப்பு :
இவரது ‘நம் நதிகள்’ எனும் தென்னாட்டு ஆறுகளைப் பற்றிய நூலை,
நேஷனல் புக் டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.
தெலுங்கில் இவரது பாடல் தொகுப்பு ஒன்றும், பல பாடல்கள்
ஆங்கிலத்திலும் பிறமொழிகளி்லும், சில நூல்கள் தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் ஆகிய தென் மொழிகளிலும், வெளிவந்துள்ளன.
|