மொத்தம் நண்பர்கள் பத்துப்பேர்
நித்தம் எனக்கே
உதவிடுவார்.
நித்தம் உதவும் அவர்களுமே
நிற்பார் இரண்டு வரிசைகளில்.
பல்லைத் துலக்க ஒருநண்பர்.
பாடம் எழுத
இருநண்பர்.
உணவை ஊட்ட ஐவர்களாம்.
உடலைத் தேய்க்கப் பத்துப்பேர்.
இப்படி உதவும் நண்பர்களை
எப்படி நானும்
பிரிந்திருப்பேன் ?
என்னை விட்டுப் பிரியாமல்
இருக்கும் அந்த நண்பர்கள்போல்
உங்களி டத்தும் பத்துப்பேர்
ஒட்டிக் கொண்டே
இருப்பார்கள்.
அவர்கள் யார்யார் தெரிகிறதா ?
அவசியம் நீங்கள் அறிந்திருப்பீர்.
|