பக்கம் எண் :

சின்னச் சின்னக் கோபுரம்


               
 சின்னச் சின்னக் கோபுரம்
                      சிற்பி செய்யாக் கோபுரம்
                 என்னைப் போல மூன்றடி
                      இருக்கும் அந்தக் கோபுரம்


                
சின்னஞ் சிறிய கோபுரம்
                      செங்கல் நிறத்துக் கோபுரம்
                 மண்ணால் ஆன கோபுரம்
                      மனிதர் நுழையாக் கோபுரம்


                
அருமை யான கோபுரம்
                      யார் அமைத்த கோபுரம் ?
                 கறையான் ஒன்று கூடியே
                      கட்டி வைத்த கோபுரம் !

 
62