குருவைப் போல நல்ல தெல்லாம்
கூறி நம்மை உயர்த்திட
அருமை நண்பன் போல் நமக்கு
அருகில் இருந்து உதவிட
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம்
நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
மெத்தப்
பெரிய கவிஞ ரோடும்
வேண்டும் போது பேசிட
சித்தம் மகிழச் செய்யும் நல்ல
சித்தி ரங்கள் பார்த்திட
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம்
நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
இரவும் பகலும் எந்த நாளும்
ஏற்ற கல்வி கற்றிட
உரிய முறையில் அறிவு பெற்றே
உயர்ந்து நாமும் சிறந்திட
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம்
நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ ! |