கொய்யாப் பூவே !
கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
குருவி, காகம் கிளையில் அமர்ந்து
கொத்திப் போட்டதோ?-இல்லை,
பெரிய
காற்று விரைந்து வந்து
பிய்த்துப் போட்டதோ?
கொய்யாப் பூவே, கொய்யாப்
பூவே,
தரையில் கிடப்பதேன்?
குறும்புப்
பையன் எறிந்த கல்லால்
பிரிய நேர்ந்ததோ? - இல்லை,
கொறிக்கும் அணில்தான் உன்னைக் கீழே
பறித்துப் போட்டதோ? |