பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை10

உருவத்தில் இரண்டும் ஒன்றுபோ லிருப்பினும்
செய்கையில் மன்னன்வில் தீமை புரியும்;
வான வில்லோ வம்பு செய்யாது!

மாந்தர் எடுத்து வளைத்த வில்லின்
செயலை ஆராய்ந்து தெளிந்தோர், அவ்வில்
கொடுமை செய்ததால் கொலைவில் என்றனர்.
வருத்தம் தராத வான வில்லினைத்
`திருவில்` என்று சிறப்போடு கூறினர்.

ஆராய்ந்து பார்த்தால் அத்தனை சொற்களின்
நல்ல காரணம் நமக்குப் புரியும்;
மெல்லிய தமிழின் மேன்மையும் விளங்குமே!

நிலா முகம்
முதன்மை பெற்றதும் முன்புறம் உள்ளதும்
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தையும்
அளக்க வல்லதும் அழகிய முகமாம்!

ஐந்துமலர் விளையும் அமுத நிலமே
முத்தம் வழங்கும் முத்திரை மணிமுகம்!

முகத்திற்கு முகவுரை முதிரா நெற்றியே
தலைக்கு முகவுரை தாமரை முகமே!

நிறுத்தி அளத்தல், நீட்டி யளத்தல்
தெறித்தே அளத்தல் தேங்கமுகந் தளத்தல்
சார்த்தி யளத்தல் பெய்தே அளத்தல்
எண்ணி எண்ணி அளத்தல் என்பதாய்
அளவுகள் ஏழென ஆதிநூல் உரைக்கும்
கூற்றுப் படிக்கும் குளிர்ந்த மலர்முகம்
சவையொளி யூறோசை நாற்றமென் றைந்தையும்
ஐம்பொறி கொண்டும் அளந்து காட்டலால்,