பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை102

ஆலயம் செல்லுகின்றேன்-சுடரொளி
       அங்குநான் ஏற்றுகின்றேன்;
வாலிப ஆசையோடு குருக்களோ
       வார்த்தைகள் ஆடுகின்றார்!

அவர்க்கொரு தோட்டமுண்டு-தனிமையில்
       அங்குநான் செல்வதுண்டு,
சுவைத்திடும் ஆசைகொண்டு-கலந்தபின்
       தூங்கவோர் கட்டிலுண்டு!

சின்னஞ் சிறு கிளியே-உலகமிச்
       செய்தி அறிந்துவிடின்,
என்னைப் பழித்திடுமோ?-இழிமொழி
       எல்லாம் உனக்கலவோ?

வெள்ளிப் பகற்பொழுதில்-நகைக்கடை
       வீதியில் செல்லுகின்றேன்;
அள்ளி எனையணைத்தே -மகிழ்ந்திட
       அள்ளி வழங்குகின்றார்!

அவர்க்கொரு தோட்டமுண்டு-தனிமையில்
      அங்குநான் செல்வதுண்டு,
சுவைத்திடும் ஆசைகொண்டு-கலந்தபின்
      தூங்கவோர் கட்டிலுண்டு!

சின்னஞ் சிறு கிளியே-உலகமிச்
       செய்தி அறிந்துவிடின், என்னைப்
பழித்திடுமோ?-இழிமொழி
       எல்லாம் உனக்கலவோ?