|
பொதுமக்கள்
நலமெனக்குப் பெரிதே யன்றிப்
புகழெனக்குப் பெரிதன்று; நாட்டுக் காக
நிதிவைத்தல் பெரிதன்று; தடுமா றாத
நீதிவைத்துக் காப்பதுவே கடின மாகும்;
விதிசெய்ய வந்தேன்யான்; எனினும் தூக்கி
வினைசெய்ய நன்மைசெய்யத் தவற மாட்டேன்.
மதிவைத்த வானத்தின் கீழிருக்கும்
மக்களையென் கண்ணுக்குள் வைத்துக் காப்பேன்!
|