விண்வெளி,
இவ்வை யத்தின்
விரிகுடை! புவியில் வாழும்
பெண்களின் கண்கள் இட்ட
பிச்சையே கடலின் நீலம்!
பண்கடல் உண்டே யன்றிக்
பாற்கடல் இருந்த தில்லை,
உண்டெனில் கதையி லன்றி
உலகினிற் காட்டு வார்யார்?
விரிகடல், வழங்கும் முத்தே!
மேகமும், வழங்கும் முத்தே!
திரைநுரை, நீரின் நோயே!
சிறுநிலாத் தழும்பும் நோயே!
கருங்கடல் உடலும் உப்பே!
காதலர் உறவும் உப்பே!
விரிந்தநீர் நெய்தல் நீரே!
விரிகடல் பெயர்முந் நீரே!!
அணிமணிக் கடலின் காட்சி
அரும்பொருட் காட்சி யாகும்.
துணையொடு கப்பல் நிற்கும்
துறைமுகம், சுற்றம்சூழ
மணவறை மீது தோன்றும்
மங்கையைப் போன்ற தாகும்.
கணவனை இழந்த பெண்ணும்,
கலமற்ற கடலும் ஒன்றே!
அலையோசை சிறந்த ஓசை
ஆதலின், அதனை யன்றிப்
புலியோசை, பூனை யோசைப்
போர்க்களம் வழங்கும் ஓசை,