யோகத்தில் இருந்திட் டாலும் ஒருசுக உலக இன்ப போகத்தில் இருந்திட் டாலும், கூட்டத்தில் உறைந்திட் டாலும் ஏகத்தில் தனிய னாக இருந்திடும் போதும் எங்கும் எப்பொருள் எதற்கும் எட்டா மெய்ப்பொருள் என்ப தோர்ந்து தேகத்தைக் கடந்த ஞானத் தெளிவுகண் டதிலே நின்று நினைத்திடும் மகிழ்ச்சி ஒன்றே தெவிட்டாத மகிழ்ச்சி யென்ற பாகத்தை அறிந்து நெஞ்சே! பாடுக பஜகோ விந்தம்! பயனுற பஜகோ விந்தம் பற்றுக பஜகோ விந்தம்! 19 கண்ணனின் கீதைச் சாரம் கங்கைநீர்த் துளியோ டுண்டுபாய் எண்ணிஓர் கணப்போ தேனும் அப்பனைத் துதிப்பாய் என்னில் திண்ணிய எருமை ஏறித் திசைவரும் காலன் உன்னைப் பண்ணுவ தொன்று மில்லை பகர்ந்திடப் பேச்சு மில்லை. 20 மறுபடி ஜனனம் கொண்டு மறுபடி மரணம் கண்டு மறுதர மாறி மாறி மாதாவின் வயிற்றில் தோன்றித் துறுதர வளர்தல் துக்கம்; துயர்கடல் கடக்கச் செய்யும் திறமுறத் திருமா லேநீ திருவருள் புரிய வேண்டும். 21 |