இவன்உடை குப்பைக் கந்தல் துணியன்றி இல்லை வேறு; பவவினை நன்மை தீமை பற்றற விட்ட பண்பன்; கவல்அறக் கண்ண னோடு கலந்துநிற் கின்ற சித்தம், அவனுளம் குழந்தை உள்ளம் ஆனந்தம் வெறியாட் டத்தான். 22 அன்னையார்? அப்ப னும்யார்? அவைவிட்டு நீதான் யாவன்? என்னும்ஈ தெல்லாம் எண்ணி எந்தநாள் சிந்தை செய்வாய்? மன்னிய பொருள்ஒன் றில்லா உலகினை மகனே! விட்டுத் துன்னிய கனவின் துன்பம் துடைத்தெழுந்(து) அறிவைத் தேடு. 23 என்மேல்உன் கோபம் வீணாம்; இகழ்வதேன் தன்னைத் தானே? எவ்வுயிர் எதுவும் ஈசன் கோயிலாம் என்ப தோர்வாய் என்மேனி மூச்சும் நான்; எதிராம்உன் உயிரே ஆகி எல்லாம்ஓர் உயிராய் நிற்கும் இறைவனே உறைவான் உன்னுள். பின்னேஏன்? நீயும் நானும் பிரிந்திட முடியா ஒன்றே; பேதமாம் மருளை நீக்கிப் பிறிதுள உயிரில் எல்லாம் அன்னானே இருக்கும் உண்மை அண்ணே! நீ அறிந்து விட்டால் அந்நாளே அப்போ தங்கே அஞ்ஞானம் அற்றுப் போகும். 24 |