பக்கம் எண் :

250நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பகையென்றும் நட்பாம் என்றும்
       பார்க்காதே; மகனே! யாதும்
மிகைசெய்யும் மோகங் கொள்ளேல்;
       சிவனடி விரைவின் மேவத்
தகையென்றும் சேர்க்க வேண்டாம்.
       தள்ளென்றும் விலக்க வேண்டாம்
நிகரென்று யாவர் மாட்டும்
       ஒன்றேபோல் நிற்க வேண்டும்.       25

க்ஷேமமே உனக்கு வேண்டின்
       சேர்ந்தஉட் பகைவ ரான
காமமே க்ரோத லோப
       மோகாதி கடிந்து நீக்கி
நேமமாய் உள்ளே நோக்கி,
       ‘நான்‘ எது? நினைத்துப் பார்ப்பாய்
பூமியே நரகம் ஆன்மப்
       பொருள்பெறா மடையர் வாழ்க்கை.       26

பாடுவாய் கீதை யோடு
       பரமன்ஆ யிரநா மங்கள்
தேடுவாய் இடைய றாமல்
       ஈசனார் இருக்கை நேர;
கூடுவாய் நல்லோர் மாட்டும்
       குலையாத நிலையில் நிற்க
வாடுவோர் வறியார்க் கீய
       வரும்எனில் செல்வம் நன்றே.       27

தொடங்கலில் சுகமாய்த் தோன்றும்
       தீநெறிச் சுகபோ கங்கள்
அடங்கலும் பின்னால் துன்பம்;
       ஆறாத துயரம் சோகம்;
ஒடுங்கிஇத் தேகம் சாகும்
       என்பதை உணர்ந்து நெஞ்சம்