பக்கம் எண் :

புலவர் சிவ. கன்னியப்பன் 251

நடுங்கியும் பாவச் செய்கை
நம்மைவிட் டகலா தேனோ?       28

நன்றிது தேர்வாய் நெஞ்சே!
       நலமெதும் பணத்தில் இல்லை;
ஒன்றிது சத்யம் இன்பம்
       ஒருதுளி பணத்தில் இல்லை;
தன்றுணை மகனைக் கூடக்
       கள்ளனாய்த் தனவான் அஞ்சும்
என்றிடும் இயல்பே எந்த
       ஊரிலும்; ஐயம் இல்லை.       29

மெய்ப்பொருள் யாது? மாயப்
              பொய்ப்பொருள் தானும் யாது?
       மேதுறப் பிரித்தே, ஓர்ந்து
              மீதுறும் அமைதி மேவி,
செப்பிய தியானத் தோடு
              ஜெபமுறை ப்ராணா யாமம்
       செய்துபின் சித்தம் ஓய்ந்து,
              மெய்ப்பொருள் அதனைச் சேரப்
பைப்பயப் பயின்றுவந்த
              பலத்துடன் புலன்க ளென்ற
       பயங்கர மூர்க்கர் உன்னைப்
              பணிந்திட அடக்கி ஆள்வாய்;
கைப்பொருள் காப்ப தேபோல்
              மனமெனும் கோயில் தன்னைக்
       காப்பதில் கவனம் வைப்பாய்;
              மிகமிகக் கவனம் வேண்டும்.       30

குருவுடைக் கமலத் தாளில்
       குறையாத பக்தி பூண்டால்
துருசிறைப் பிறவி நீங்கித்
       துரிதமாய் மீள்வாய் திண்ணம்