விடுதலை ஆர்வத்தில் வேகத்தை மூட்டி வீரத் தனங்களில் ஆசையை ஊட்டி துடிதுடிப் போடிந்தத் தேசத்தில் எங்கும் சொல்லித் தராமலும் சொல்லி முழங்கும். (ஜேய்)3 ‘வந்தே மாதரம்‘ பாடி வணங்கி வாழ்த்திநம் அன்னையின் வெற்றி முழங்கி ‘தந்தோம் உன்றன் சுதந்தரம்‘ என்றே தைரியம் சொல்வது ‘ஜேய் ஹிந்த்‘ அன்றோ! (ஜேய்)4 வாலிபர் நெஞ்சின் வசீகர மாரன் வரையற்ற தியாகி சுபாஷ் சந்திர வீரன் கோலிய சேனையின் விடுதலை கோஷம் குறையாது ஜேய் ஹிந்த் மேலுள்ள பாசம். (ஜேய்)5 குறிப்புரை:-நாதம் - ஒலி, ஓசை; பேதம் வேறுபாடு; அச்சம் - பயம்; துச்சம் - கீழ்மை,இழிவு.
|