பக்கம் எண் :

64நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கூடுவிட்டுக் கூடுபாயும்
       சித்துசெய்யக் கோரியும்
கோடிகாலம் வாழ எண்ணிக்
       காயகற்பம் தேரியும்
தேடுகின்ற உண்மையாவும்
       ஓடி வந்து நிற்குமே
தெய்வவாக்கு வள்ளுவன்
       திருக்குறள்கள் கற்கவே.       4

அன்புதந்த அருள்விளக்கி
       அறிவுசொல்லும் அறமொழி
ஆன்மஞானம் என்றுசொல்லும்
       அதையும்சேரப் பெருவழி
துன்பமென்ற உலகவாழ்வில்
       துயரம்ஏதும் வந்திடில்
துணைபுரிந்தே அருகிருந்து
       தோதுசொல்லும் மந்திரி.       5

இன்பம்என்று தவறுசெய்து
       நோய்கள்சேரக் கண்டதும்
இடைபுகுந்து மாற்றுரைத்தே
       இடரைநீ்க்கும் பண்டிதம்.
தென்புமிக்க தூயவாழ்வின்
       தெளிவுகாட்டும் வண்பதாம்
தெய்வஞான வள்ளுவன்
       திருக்குறள்கள் என்பவாம்.       6

34. காத்திடலாம் தமிழ் மொழியை

சீர்சிறந்த தமிழர்களின் புத்தாண் டிந்தச்
       சித்திரையில் தொடங்குகிற திறத்தால் இன்று
பார்புரந்த மனுநீதிச் சோழன் பண்டோர்
       பசுவினுக்கும் சமதர்மம் பரிவாய்ச் செய்தான்!