ஏர்சிறந்த ஒருமகனை ஈடாய்த் தந்தான்; இணையறியாப் பெரும்புகழைத் தமிழுக்கு ஈந்தான் தேர்சிறந்த தியாகேசன் திருவா ரூரில் திகழுமிந்தச் சபைதனிலோர் சபதம் செய்வோம்! 1 அமிழ்தமென எவ்வுயிர்க்கும் அன்பு செய்தே அருள்நெறியைப் புகட்டுவதே அறமாய்க் கொண்ட தமிழ்மொழியின் பெருங்குணத்தின் தாரா ளத்தைத் தடுக்கவரும் துடுக்குகளைத் தவிர்க்க வேண்டும். நமதருமை முன்னோர்கள் நெடுநா ளாக நடத்திவந்த நன்நெறியை நலியப் பேசி அமைதிமிக்க தமிழ்வாழ்வைக் குலைக்க எண்ணும் அநியாயம் முழுவதையும் அகற்ற வேண்டும். 2 பாண்டியரும் சோழர்களும் சேர மன்னர் பாடுபட்டுப் பயிர்செய்த நாக ரீகம் நீண்டுயர்ந்து கோபுரங்கள் வடிவாய் நின்று நிரந்தரமாம் பரம்பொருளின் நினைவு கூட்டித் தூண்டியநல் லுணர்ச்சிகளின் தொகுப்பே யன்றோ தொன்றுதொட்டு இன்றளவும் தொடரும் நூல்கள்? ஈண்டிவைகள் யாவினையும் இகழ்வோ மானால் என்னமிச்சம் தமிழ்வளர்ச்சி இனிமை உண்டோ? 3 கோயில்களின் பெரும்பயனைக் குறைத்துப் பேசிக் கும்பிடுவோர் நம்புவதைக் குலைத்தும் ஏசித் தூயவழி வாழ்வதற்கு நல்லோர் கண்ட துறவுமனப் பொறையறிவைத் தோஷம் சொல்லி வாயில்வந் தகொச்சைகளால் வசைகள் வீசி வகுப்புகளில் வெறுப்புகளே வளரச் செய்யும் ஞாயமற்ற பேச்சுகளை நீக்கா விட்டால் நம்முடைய தமிழ்வாழ்வு நாச மாகும். 4 முன்னோர்கள் யாவரையும் மூடரென்றும் மூவேந்தர் பரம்பரையும் அமைச்சர் முற்றும் 3 நா.க.பா. பூவெ. எ. 489 |