பக்கம் எண் :

 

மோட்டார்

 

                  ‘பூம், பூம்’ என்ற சப்தமுடன்
                     போகுது மோட்டார் பார், பார், பார்.
                  ‘ஜாம், ஜாம்’ என்றே அதிலேறிச்
                     சவாரி செய்வோம் வா, வா, வா.
 

                  அப்பா காசு தந்திடுவார்.
                    அதனில் மோட்டார் வாங்கிடலாம்.
                  சுப்பா, நீயும் தோழர்களும்
                    சொகுசாய் ஏறிச் சென்றிடலாம்.

                  நான்தான் காரை ஓட்டிடுவேன்.
                    நாலா பக்கமும் சுற்றிடலாம்.
                  ‘டாண், டாண்’ பள்ளிக் கூடமணி
                    நம்மை அழைக்கச் சென்றிடலாம்.


                 ‘பெட்ரோல்’ வேண்டாம்; கரிவேண்டாம்;
                   ‘பெடலை’ அழுத்தியே ஓட்டிடுவேன்.
                  எட்டுத் திசையும் சுற்றிடவே
                   இஷ்டம் உள்ளவர் வாருங்கள்!   
             

26