பட்டணம்
போகிற மாமா
பட்டணத்தைப் பார்க்கப்போகும்
சின்னமாமா - இந்தப்
பையனை நீ மறந்திடாதே,
சின்னமாமா.
பாப்பாவுக்கு ஊதுகுழல்
சின்னமாமா - அந்தப்
பட்டணத்தில் வாங்கிவாராய்,
சின்னமாமா.
அக்காளுக்கு ரப்பர்வளை
சின்னமாமா - அங்கே
அழகழகாய் வாங்கிவாராய்,
சின்னமாமா.
பிரியமுள்ள அம்மாவுக்கு,
சின்னமாமா - நல்ல
பெங்களூருச் சேலைவேண்டும்,
சின்னமாமா. |