பக்கம் எண் :

பக்கம் :106பூங்கொடி

மீனவன் தாக்குறலும் - வேறிடம் சேறலும்

 

 

அருகமை சிற்றூர் ஆண்டு விழாவில்
பெருமழை என்னச் சொன்மழை பொழிந்து
வருமவன் மீனவன் வண்டியை இருளில்
ஊர்க்குறு மாக்கள் தாக்கினர்; அவனைத்
 
  தீர்த்திட எண்ணித் தீட்டிய வாளால் 160
  வெட்டினர்; ஆனால் விளைந்தது வேறு!
கட்டிளங் காளையர் தட்டுவண்டி யோட்டிக்
கொட்டி முழக்கிக் கூஉய்வரல் கேட்டு
விட்டுவிட் டோடினர் விலங்குச் செயலோர்;
 
  வந்த காளையர் வாரி யணைத்து 165
  நொந்த உடலின் நோவினை அகற்றிக்
கூடல் நகரிற் கொண்டுய்த் தனரே;
`வேடன் கட்படு வெண்புற வானேன்!
பாடும் தமிழைப் பரப்புதல் பழியோ?
 
  கூடி எங்கும் கொலைசெய் மாக்கள் 170
  தேடி அலையத் தொடங்குதல் கண்டேன்;
காடும் நாடும் ஒன்றெனக் கண்டேன்;
உயிர்ப்பலி உறுதி, ஓரிடம் தரியேன்;
செயிர்த்தோர் என்னைச் செகுத்தொழிக் காமுனம்
 
  ஊரூர் ஓடி உயரிசை பரப்பிப் 175
  பாரோர் ஏற்கப் பணிபுரிந் தழிவேன்'
என்றம் மீனவன் ஏகினன் விரைந்தே;
 
     
 

ஏமகானன் தூண்டு மொழி

 
     
  தங்கத் தேவன் தகவல் அறிந்ததும்
`எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்;
 
  யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக் 180
  கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்;  

---------------------------------------------------------------

  கட்படு - கண்ணில்படும், செகுத்து - அழித்து, முனம் - முன்பு.